Saudi arabia international flight open news சவூதி அரேபியா ஃப்ளைட் ஓபன் நியூஸ்

 

https://anandham.blogspot.com/

15/09/2020 இன்று முதல் 


*சவூதி அரேபியாவில் ஜனவரி 1 2020 முதல் கொரோனா எதிரொலியாக இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்த அனைத்து போக்குவரத்து கட்டுப்பாடுகளும்  தளர்வு*


*_நிபந்தனைகளுடன் கூடிய விதிவிலக்குகள் செப்.15 முதல் அமல்_* 


  👉  கொரோனா பரவலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த மார்ச்.15 முதல் அமலில் இருந்த கட்டுப்பாடுகளான  சவுதியில் இருந்து வெளியேறுதல், திரும்பி வருதல் உட்பட கடல், நிலம், விமான வழியான அனைத்து விதமான போக்குவரத்து தடைகளும் வருகின்ற   1ஜனவரி2020 முதல்  வரையறுக்கப்பட்ட பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி முற்றிலும் தளர்வு செய்ய அனுமதி வழங்கப்பட உள்ளதாக செப். 13 அன்று சவுதி அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  👉  வளைகுடா நாடுகள் (GCC)ல் உள்ள சவுதி நாட்டினர் மற்றும் வெளிநாட்டினரிடம்   செல்லுபடியாகும் விசா இருப்பின்

அவர்கள் *செப்.15* முதல் திரும்பி வர அனுமதிக்கப்படுவார்கள்.


   👉 செல்லுபடியான  எக்சிட் ரீ-என்ட்ரி (exit re-entry) விசா, வேலை அனுமதி விசா (work visa) இகாமா மற்றும் விசிட் விசா முதலியனவற்றில் ஏதேனும் ஒன்றை 

வைத்திருக்கும்  வெளிநாட்டினர் கொரோனா முன்னேச்சரிக்கை மற்றும் பாதுகபாப்பு குறித்து அரசாங்கத்தால் வரையறுக்கப்பட்ட நெறிமுறைகளை பூர்த்தி செய்யும் பட்சத்தில் நாட்டிற்குள் நுழைய  அனுமதிக்கப்படுவர்.


   👉 கொரோனா பரவலை கட்டுபடுத்துவதில்  சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து தகுதிவாய்ந்த அதிகாரிகள் சமர்ப்பிக்கும் தினசரி அறிக்கைகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சவுதி பத்திரிகை நிறுவனம் (SPA) உள்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ ஆதாரத்தை மேற்கோள் காட்டி தெரிவித்துள்ளது.

    👉  2020 ஆம் ஆண்டு இறுதிக்குள் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதற்கான சாத்தியகூறுகள் குறைவாக உள்ள நிலையில் குடிமக்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை  கருத்தில் கொண்டு இத்தகைய முடிவுகள் எடுக்கப்பட்டதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

    👉 இதனைத் தொடர்ந்து உம்ராஹ் யாத்திரியை மீண்டும் தொடங்குவது சம்பந்தமான அறிவிப்புகளும் நேற்று வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.


   👉 அரசாங்க அறிவிப்பின்படி ஜனவரி 1ம் தேதிக்கு 30 நாட்கள் முன்பாக கட்டுபாடுகள் தளர்வு குறித்த துல்லியமான தேதி அறிவிக்கப்படும் எனவும் சுகாதார அமைச்சகம் சமர்பிக்கும் கடல், நிலம் மற்றும் விமான வழியான பயணங்களில் கடைபிடிக்க வேண்டிய  பாதுகாப்பு நெறிமுறைகள் தொடர்பான அறிக்கையின் அடிப்படையில் இந்த அறிவிப்பு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


    👉  ஜனவரி 1 ஆம் தேதி முதல் அறிவிக்கப்பட உள்ள தளர்வுகளுக்கு முன்னதாக செப்.15 முதல் சவுதிக்குள் நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் பின்வரும் விதிவிலக்குள் அறிவிக்கப்பட்டுள்ளன.


*_சவுதி நாட்டவரில் பின்வரும் வகுப்பினருக்கு வெளியேற மற்றும் நுழைவதற்கான  விதிவிலக்குகள்_*:


   👉  ராணுவ மற்றும் அரசாங்க அதிகாரிகள் 

 👉 தூதரக பணியாளர்கள் (diplomatic mission), அவர்களது குடும்பத்தினர்வெ வெளிநாட்டில்ரசாங்க, தனியார் மற்றும் தன்னார்வ நிறுவனங்களில் நிரந்தர பணியில் இருப்பவர்கள்

   👉 வெளிநாட்டில் தொழில் புரிபவர்கள்      👉 புற்றுநோய் முதலிய நோய்களுக்காக வெளிநாட்டில் சிகிச்சை மேற்கொள்ளும் நோயாளிகள்

   👉 வெளிநாட்டில் பயிலும் மாணவர்கள் மற்றும் மருத்துவ பயிற்சியில் இருப்பவர்கள்

  👉  குடும்பத்துடன் சேர்தல் மற்றும் குடம்பத்தில் ஏற்பட்ட இறப்பு போன்ற மனிதாபிமான காரணங்களுக்காக பயணிப்பவர்கள்


    👉 வளைகுடா நாடுகள் (GCC) இல் உள்ள சவுதி நாட்டவர் மற்றும் வெளிநாட்டவர்களில் பின்வரும் வகுப்பினருக்கான விதிவிலக்குகள்_*:


  👉 உள்நாட்டு மற்றும் சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்ளும் விளையாட்டு வீரர்கள் மற்றும் நிர்வாகத்தினர்

வளைகுடா நாடுகளின் குடிமக்கள் (GCC Citizens) மற்றும் செல்லுபடியான  எக்சிட் ரீ-என்ட்ரி (exit re-entry) விசா, வேலை அனுமதி விசா (work visa) இகாமா மற்றும் விசிட் விசா முதலியனவற்றில் ஏதேனும் ஒன்றை 

வைத்திருக்கும்  சவுதி அல்லாத வெளிநாட்டினர் பின்வரும் நிபந்தனைகளின் அடிப்படையில் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவர் 


 👉 கொரோனா முன்னேச்சரிக்கை மற்றும் பாதுகபாப்பு குறித்து அரசாங்கத்தால் வரையறுக்கப்பட்ட நெறிமுறைகளை பூர்த்தி செய்தவர்கள்


  👉  கொரோனா தொற்றால் பாதிக்கபடவில்லை என்பதை நிரூபிக்கும் சவுதிக்குள் நுழைய 48 மணி நேரத்திற்குள்ளாக வழங்கப்பட்ட மருத்துவ சான்றிதழை வைத்திருப்பவர்கள்


  👉  விதிவிலக்கு அளிக்கப்பட்ட மேற்குறிப்பிட்ட வகுப்பினர் சவுதிக்குள் நுழைய மற்றும் வெளியேறுவதற்கு ஏதுவாக சர்வதேச விமானங்கள் மற்றும் நிலம், கடல் வழியான பயண கட்டுப்பாடுகளில் சில தளர்வுகள் செய்யப்படும்

 👉 இந்த விதிவிலக்குகள்   கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 

பயண தடை செய்யப்பட்டுள்ள நாடுகள் தவிர மற்ற எல்லா நாடுகளுக்கும் பாரபட்ச்சம் இன்றி பொருந்தும்.


Comments

Popular posts from this blog

Tawakkalna login without application

Saudi Arabia 1 August 2021 New Rule

Saudi to Tamilnadu passenger