unwanted 11 app இந்த 11 ஆப் உங்கள் மொபைலில் டவுன்லோட் செய்திருந்தால் டெலிட் செய்யவும்



ஜோக்கர் என்ற கணினி வைரஸைப் புகுத்தி வந்த 11 செயலிகளை தன் ப்ளே ஸ்டோரிலிருந்து அதிரடியாக நீக்கியுள்ளது கூகுள் நிறுவனம்.
கடந்த 2017ஆம் ஆண்டிலிருந்து சில செயலிகளின் செயல்பாடுகளை ஆராய்ச்சியாளர்கள் உன்னிப்பாகக் கவனித்து வந்துள்ளனர்.
அவற்றில் 11 செயலிகள், 'ஜோக்கர் மால்வேர்' என்ற கணினி வைரஸால் தாக்கப்பட்டிருப்பதைக் கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
உலகின் நம்பர் 1 தகவல் தொழில்நுட்ப நிறுவனமான கூகுளின் ப்ளே ஸ்டோர் உருவாக்கியுள்ள அனைத்துப் பாதுகாப்பு சுவர்களையும் மீறி அந்த செயலிகள் தாக்கப்பட்டதுதான் அந்த அதிர்ச்சிக்குக் காரணம்.
இந்த வைரஸ் மூலம், அந்த செயலிகளைப் பயன்படுத்துவோரின் முக்கிய விவரங்கள் அனைத்தையும் அவர்கள் அறியாமலேயே ஹேக்கர்களால் திருட முடியும்.
இதையடுத்து, கீழ்க்கண்ட அந்த 11 செயலிகளையும் கூகுள் நிறுவனம் தன் ப்ளே ஸ்டோரிலிருந்து அதிரடியாக நீக்கியுள்ளது.
com.imagecompress.android
com.contact.withme.texts
com.hmvoice.friendsms
com.relax.relaxation.androidsms
com.cheery.message.sendsms (two different instances)
com.peason.lovinglovemessage
com.file.recovefiles
com.LPlocker.lockapps
com.remindme.alram
com.training.memorygame
இச்செயலிகளை தங்கள் ஆண்ட்ராய்டு மொபைல்களில் பதிவிறக்கம் செய்துள்ளோர், அவற்றை உடனடியாக அழித்து விடுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இதே ஜோக்கர் வைரஸ் தாக்கிய சுமார் 1,700 கொடிய 'பிரெட்' செயலிகளை இந்த ஆண்டுத் தொடக்கத்தில் ப்ளே ஸ்டோரிலிருந்து கூகுள் நீக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆனாலும், இந்த ஜோக்கர் வைரஸ் எந்த வழியிலாவது கூகுள் ப்ளே ஸ்டோருக்குள் புகுந்துவிடும் என்று கூறப்படுவது அதிர்ச்சியின் உச்சம்!
இந்த விஷயத்தில் செயலி பயனாளர்களாகிய நாம்தான் படு உஷாராக இருக்க வேண்டும் என்பதே உண்மை!

Comments

Post a Comment

Thanks for comments

Popular posts from this blog

சவூதி விசா மற்றும் இக்கமா சலுகை

Before boarding Important thinks