வருமான வரித்துறை விதிகளின்படி எவ்வளவு தங்கம் வைத்திருக்க முடியும் தெரியுமா
வரித்துறை விதிமுறைகளின்படி ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட அளவு தங்கத்தைத்தான் வைத்திருக்க முடியும்.
இந்தியர்களான நம்மைப் பொறுத்தவரை, தங்கம் என்பது ஒரு சாதாரண முதலீடு மட்டுமல்ல; அது நம் வாழ்வின் ஒரு அங்கம்!
இந்தக் கொரோனா ஊரடங்கு காலத்தில் கூட தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறிக் கொண்டே இருப்பதைப் பார்க்கும்போது, அதன் மகத்துவம் நன்றாகவே தெரிகிறது.
ஆனாலும், ஒருவர் தன் வீட்டில்
இவ்வளவுதான் தங்கம் வைத்திருக்க வேண்டும் என வரையறைத்துள்ளனர் வருமான வரித்துறையினர்.
அந்த வரம்பு கூட பெரும்பாலும் பெண்களைக் கொண்டுதான் வரையறைக்கப்பட்டுள்ளது!
அதாவது, ஒரு திருமணமான பெண் தன்னிடம் 500 கிராம் வரை தங்கத்தை வைத்துக் கொள்ள முடியும்.
அதே நேரத்தில், திருமணமாகாத ஒரு பெண்ணிடம் அதிகபட்சம் 250 கிராம் தங்கம் மட்டுமே இருக்க வேண்டுமாம்.
ஆனால், ஆண்களில் ஒவ்வொருவரும் தங்களிடம் 100 கிராம் தங்கத்தை மட்டுமே வைத்திருக்க முடியும்.
ஒவ்வொருவரும் இந்த அளவுக்கு தங்கம் வைத்திருந்தாலும், இதற்காக அவர்கள் வருமானம் தொடர்பான எந்தவித ஆதாரத்தையும் வைத்திருக்க/காட்ட வேண்டிய அவசியமில்லை.
ஆனாலும், இந்த மேலே குறிப்பிட்ட வரையறைகளுக்கு அதிகமான தங்கத்தை வைத்திருக்கும் யாவரும் அதற்கான கணக்கை வருமான வரித்துறையிடம் சமர்ப்பிக்க வேண்டியது அவசியம்.
பரம்பரை பரம்பரையாகப் பராமரித்து வரும் தங்க நகைகளாக இருக்கும் பட்சத்தில், அதையும் தக்கவகையில் நிரூபிக்க வேண்டும்.
உலகிலேயே இந்தியர்களாகிய நாம்தான் தங்கத்தை அதிகம் பயன்படுத்துகிறோம் என்று கூறினால், அதில் மிகையில்லை; ஆச்சரியமும் இல்லை.
"கையில் பணம் இருக்கிறதா? அதை உடனே மண்ணிலே போடு (வீடு/மனை வாங்கு); அல்லது, பொன்னிலே போடு (தங்க நகை வாங்கு)" என்று பொதுவாக நாம் பேசிக் கொள்வதுண்டு.
அதனால்தான் நம் ஒவ்வொருவருடைய வீட்டிலும் தங்கம் ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது.
Comments
Post a Comment
Thanks for comments