ஆத்மனிர்பார் பாரத் செயலி நிதி ஆயோக் தொடங்கியது




பிரதமரின் மின்னணு இந்தியா-சுயசார்பு இந்தியா தொலைநோக்கை நிறைவேற்ற, டிஜிட்டல் இந்தியா சுயசார்பு இந்தியா புத்தாக்க சவால் செயலியை மெய்டி மற்றும் நிதி ஆயோக் தொடங்கியது.
இதுதொடர்பாக மத்திய அரசு தெரிவித்துள்ளதாவது:
இந்திய செயலிகளுக்கு வலுவான சூழல் முறையைக் கட்டமைத்து, அவற்றுக்கு ஆதரவு அளிக்கும் நோக்கத்துடன், இந்தியத் தொழில்நுட்ப தொழில் முனைவோர் மற்றும் ஸ்டார்ட் அப்-களுக்கான மின்னணு இந்தியா, சுயசார்பு இந்தியா செயலிப் புத்தாக்க சவாலை அடல் புத்தாக்க இயக்கத்துடன் சேர்ந்து மெய்டி- நிதிஆயோக் ஆகியவை தொடங்கியுள்ளன. டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி சுயசார்பு இந்தியாவைக் கட்டமைத்து, டிஜிட்டல் இந்தியாவை உருவாக்குவதன் மூலம் பிரதமரின் தொலைநோக்கைப் பூர்த்தி செய்ய இது உதவும்.
இது 2 டிராக்குகளில் இயங்கும்; தற்போது உள்ள செயலிகளை மேம்படுத்துதல், புதிய செயலிகளை உருவாக்குதல்.
இன்று தொடங்கப்பட்ட டிராக் 1 செயலி புத்தாக்க சவால், ஏற்கனவே மக்கள் பயன்படுத்தி வரும் இந்தியச் செயலிகளைக் கண்டறிந்து, அந்தந்தப் பிரிவுகளில் உலகத்தரம் வாய்ந்த செயலிகளை உருவாக்கும் வகையில், அவற்றின் ஆற்றலை அளவிடுவதில் கவனம் செலுத்தும்.
இதன் தொடர்ச்சியாக, சுயசார்பு இந்தியா செயலியின் இரண்டாவது டிராக்கையும் அரசு தொடங்கும். இந்திய ஸ்டார்ட் அப்-கள்/ தொழில் முனைவோர்/ நிறுவனங்கள் ஆகியவற்றை அடையாளம் காண இது விழையும். கருத்தியல், முன்மாதிரி ஆகியவற்றுடன் விண்ணப்பங்களை வெளியிட ஊக்குவிக்கும். இந்த டிராக் நீண்டகாலத்துக்குச் செயல்படும். இதன் விவரங்கள் தனியாக வழங்கப்படும்.
சுயசார்பு இந்தியா செயலி புத்தாக்க சவால் டிராக் 1, பின்வரும் 8 அகன்ற பிரிவுகளில் தொடங்கப்பட்டு வருகிறது;
அலுவலக உற்பத்தித் திறன் மற்றும் வீட்டிலிருந்து பணி, சமூகக் கட்டமைப்பு, இ-கற்றல், கேளிக்கை, சுகாதாரம் மற்றும் நலம், அக்ரிடெக் மற்றும் பின்- டெக் உள்ளிட்ட வர்த்தகம், செய்திகள் மற்றும் விளையாட்டுகள் என ஒவ்வொரு பிரிவிலும் பல்வேறு துணைப்பிரிவுகள் இருக்க வாய்ப்புள்ளது.
புத்தாக்க சவால் innovate.mygov.in/app-challenge என்ற தளத்தில் ஜூலை 4ம் தேதி முதல் கிடைக்கும். விண்ணப்பங்களை நிறைவு செய்து தாக்கல் செய்ய ஜூலை 18 கடைசி தேதியாகும். www.mygov.in. என்ற தளத்தில் லாக்-இன் செய்து, விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் தங்கள் கருத்துருக்களை தாக்கல் செய்ய வேண்டும்.
தனியார் துறை மற்றும் கல்வித்துறையைச் சேர்ந்த நிபுணர்களுடன் ஒவ்வொரு டிராக்கிற்கும் சிறப்பு நடுவர் இருப்பார். அவர்கள் பெறப்பட்ட விண்ணப்பங்களை மதிப்பீடு செய்வார்கள். தேர்ந்தெடுக்கப்படும் செயலிகளுக்குப் பரிசுகள் வழங்கப்படும். மக்களுக்கு தகவல்களை அளிக்க லீடர் போர்டுகளில் இது வெளியிடப்படும். தகுதியான, பொருத்தமான செயலிகளை அரசு ஏற்றுக்கொள்ளும். அவற்றுக்கு வழிகாட்டுவதுடன், அரசின் இ-சந்தை இடத்தில் பட்டியலிடப்படும்.

Comments

Popular posts from this blog

Tawakkalna login without application

Saudi Arabia 1 August 2021 New Rule

Saudi to Tamilnadu passenger