கொரோனா மாதிரி உலகை மிரட்டிய கிருமிகளின் தொகுப்பு இதை படியுங்கள் உங்களுக்கே புரியும்

இன்றைக்கு கொரோனா போல, மனித குலத்தை பல நூற்றாண்டுகளாக பல்வேறு தொற்றுநோய்கள் அவ்வப்போது வந்து மிரட்டிக் கொண்டு தான் இருந்திருக்கின்றன. தடுப்பூசிகளும், மருந்துகளும் புதிது புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டு, பல தொற்றுநோய்கள் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டாலும்... ஒரு சில நோய்கள் மட்டும் முழுவதுமாக குணப்படுத்த முடியாதவையாக, மருத்துவ அறிவியலுக்கு சவால் விட்டுக் கொண்டிருக்கின்றன.
நவீன மருத்துவத்தால் கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட, கட்டுக்குள் கொண்டு வரமுடியாத தொற்றுகள் குறித்த பார்வை...

சாதித்தவை:
* பன்றிக்காய்ச்சல்
மருந்து: 2009ம் ஆண்டு ஏப்ரலில் கண்டறியப்பட்டதில் இருந்து 5 மாதத்திற்கு பிறகு தடுப்பு மருந்து கண்டறியப்பட்டது.
வீரியத்திறன்: 60 முதல் 70% வரை நோயை கட்டுப்படுத்தும் திறன் கொண்டது இந்த மருந்து.
சவால்கள்: நீண்டகால நோய் எதிர்ப்பு திறனற்றதாகவே உள்ளது.

* எபோலா வைரஸ்
மருந்து: 2014ல் பாதிப்பை ஏற்படுத்தியது. 2 ஆண்டுக்கு பிறகே தடுப்பு மருந்து கண்டறியப்பட்டது.
வீரியத்திறன்: 95% முதல் 100% குணப்படுத்தும் தன்மை கொண்ட இந்த மருந்து.
சவால்கள்: வளரும் நாடுகளிடையே கொண்டு சேர்ப்பது.

* இன்ப்ளூயன்சா வைரஸ்
மருந்து: ஸ்பானிஷ் இன்ப்ளூயன்ஸா பெருந்தொற்று கண்டறியப்பட்ட 1918ல் இருந்து, 22 ஆண்டுக்குப் பிறகே தடுப்பு மருந்து கண்டறியப்பட்டது.
வீரியத்திறன்: 40 முதல் 60 சதவீதம் வரை குணப்படுத்தக் கூடியது.
சவால்: ஒவ்வொரு நிலையிலும் இந்த வைரஸ் புதுவிதமாக மாறி வருகிறது.

* கக்குவான் இருமல்
மருந்து: 1578ல் கண்டறியப்பட்டாலும், சுமார் 330 ஆண்டுகளுக்கு பிறகே தடுப்பு மருந்து கிடைத்தது.
வீரியத்திறன்: 80 சதவீதம் முதல் 90 சதவீதம் குணப்படுத்தக் கூடியது.
சவால்: வைரசின் செயல்திறன் மாற்றம் ஏற்படுவதால் முழுமையாக குணப்படுத்த முடியவில்லை.

* டெட்டனஸ்
மருந்து:1890ல் கண்டறியப்பட்டாலும் சுமார் 34 ஆண்டுக்கு பிறகே தடுப்பு மருந்து கிடைத்தது.
வீரியத்திறன்: 100% குணப்படுத்தக் கூடியது.
சவால்கள்: குளிர்ந்த தட்பவெப்ப நிலையில் இந்த மருந்தை வைத்திருப்பதிலும், கையாள்வதிலும் சில சிரமங்கள் உள்ளன.

* பெரியம்மை
மருந்து: 1796ம் ஆண்டில் தான் தடுப்பு மருந்து கண்டறியப்பட்டது.
வீரியத்திறன்: 95 சதவீதம் வரை குணப்படுத்தும்.
சவால்கள்: 200 ஆண்டுகளுக்கு பின்னரே ஒழிக்கப்பட்டது.
1974ல் இந்தியாவில் மட்டும் சுமார் 15 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.

* தட்டம்மை
மருந்து: 1912ல் கண்டறியப்பட்ட இந்த நோய்க்கு சுமார் 50 ஆண்டுக்கு பிறகே மருந்து கண்டுபிடிக்கப்பட்டது.
வீரியத்திறன்: 93 சதவீதம் குணப்படுத்தும்.
சவால்கள்: இந்த மருந்து குறைந்தளவிலான நோய் எதிர்ப்பு திறனை கொண்டதாக உள்ளது.

* ரேபிஸ்
மருந்து: 1885ல் தான் மருந்து கண்டுபிடிக்கப்பட்டது.
வீரியத்திறன்: 80 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை குணப்படுத்தக் கூடியது.
சவால்கள்: பலமுறை மருந்தை உபயோகிக்க வேண்டியதாலும், குளிர்ந்த தட்பவெப்பநிலையில் வைத்து கையாள்வதிலும் சில சிரமங்கள் உள்ளன.

* போலியோ
மருந்து: 1894ல் பாதித்தாலும், 60 ஆண்டுகளுக்கு பிறகு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டது.
வீரியத்திறன்: 90 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை குணப்படுத்தக் கூடியது.
சவால்கள்: இந்த மருந்தை மிகக் குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளிடையே கொண்டு சேர்ப்பதில் சிறு சிரமம் உள்ளது.

ஓரளவு சாதித்தவை:
* காசநோய்
மருந்து: ஓரளவுக்கு செயல்திறன் மிக்க தடுப்பு மருந்து 1921ல் கண்டுபிடிக்கப்பட்டது. முழு செயல்திறன் மிக்க மருந்தை கண்டறிவதற்கான சோதனைகள் நடந்து வருகிறது.
வீரியத்திறன்: 70 முதல் 80 சதவீதம் வரையே குணப்படுத்தும்.
சவால்கள்: செயலற்ற நிலையில், வயதிற்கேற்ப தாக்கம் உள்ளது. பலதரப்பட்ட தடுப்பு மருந்துகளை கண்டறிவதில் பல சவால்கள் உள்ளன.

* பிளேக்
மருந்து: 1895 ஆராய்ச்சிகள் துவங்கி, 2 ஆண்டுக்கு பிறகே மருந்து கண்டறியப்பட்டது. வீரியத்திறன்: இதற்கென தனியாக மருத்துவ மதிப்பீடு எதுவும் இல்லை. கள அனுபவத்தின்படி மருந்து நோயின் வீரியத்தை குறைக்கும்.
சவால்கள்: நோயாளர்களுக்கு நீண்டகால பாதுகாப்பு தருவதில் தோல்வியே கிடைத்துள்ளது.

சறுக்கியவை:
* எச்ஐவி
சவால்கள்: பொதுவாக உடலில் செலுத்தப்படும் மருந்து, நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் தோற்றுவித்து குணப்படுத்தும். ஆனால், எச்ஐவி தொற்று உடலுக்குள் அதிவேகத்தில் பல்கிப் பெருகுவதால் அதை கட்டுப்படுத்துவது பெரும் சவாலாகவே நீடிக்கிறது.

* மலேரியா
சவால்கள்: 10 ஆண்டாக ஆராய்ச்சிகள் நடந்தாலும், இதற்கான தடுப்பு மருந்தை உருவாக்குவதில் பல தடைகள் உள்ளன. சிக்கலான ஒட்டுண்ணிகளால் 5 ஆயிரத்திற்கும் அதிகமான மரபணுக்கள் நோய் கிருமிகளுக்கு சாதகமாக உள்ளன.

Comments

Post a Comment

Thanks for comments

Popular posts from this blog

சவூதி விசா மற்றும் இக்கமா சலுகை

Before boarding Important thinks

unwanted 11 app இந்த 11 ஆப் உங்கள் மொபைலில் டவுன்லோட் செய்திருந்தால் டெலிட் செய்யவும்