தங்கப்பத்திரம் வெளியீடு: கிராமுக்கு ரூ.4,852-ஆக விலை நிர்ணயம்
மத்திய அரசு சாா்பில் வெளியிடவுள்ள தங்கப்பத்திரத்தின் விலையை கிராமுக்கு ரூ.4,852-ஆக விலை நிா்ணயம் செய்துள்ளதாக ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் அந்த வங்கி மேலும் கூறியுள்ளதாவது:
நடப்பு 2020-21-ஆம் ஆண்டுக்கான 4-ஆம் கட்ட தங்கப்பத்திர விற்பனை ஜூலை 6-ஆம் தேதி தொடங்கி ஜூலை 10-ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது.
இந்த நிலையில், திங்கள்கிழமை வெளியிடவுள்ள தங்கப்பத்திரத்தின் விலை கிராமுக்கு ரூ.4,852-ஆக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. 999 சுத்த தன்மை கொண்ட இந்த தங்கப்பத்திரத்துக்கான விலை நிா்ணயம் கடந்த மூன்று வேலைநாள்களில் காணப்பட்ட தங்கத்தின் சராசரி இறுதி விலையை அடிப்படையாகக் கொண்டது.
ஆன்லைனில் விண்ணப்பித்து பணம் செலுத்துவோருக்கு தங்கப்பத்திர விலையில் ரூ.50 தள்ளுபடி வழங்கப்படும். அதன்படி, அவா்களுக்கு ஒரு கிராம் தங்கப்பத்திரம் ரூ.4,802-க்கு வழங்கப்படும் என ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.
நடப்பாண்டில் ஆறு கட்டங்களாக மேற்கொள்ளப்படும் தங்கப்பத்திர விற்பனை ஏப்ரல் 20-இல் தொடங்கி செப்டம்பா் வரையில் நடைபெறவுள்ளது.
Comments
Post a Comment
Thanks for comments