IQAMA இக்காமா பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள்
வணக்கம்
இக்காமா பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள்
இக்காமா என்றால் என்ன?
சவுதி அரேபியாவில் வெளிநாட்டவர்கள் வேலை செய்து இருக்க கூடியவர்களுக்கு அல்லது அவர்களைச் சார்ந்து இருப்பவர்களுக்கு வழங்கப்படக் கூடிய விசா மற்றும் குடியிருப்பு அனுமதி ஆகும்
இக்காமாவின் செல்லுபடியாகும் காலங்கள் எவ்வளவு?
பொதுவாக இக்காமா வழங்கப்படும் காலம் ஒன்று அல்லது இரண்டு வருட காலத்திற்கு மட்டுமே வழங்கப்படும் உங்களுடைய தற்பொழுது இக்காமா அட்டை 5 ஆண்டுகள் செல்லுபடியாகும் வருடா வருடம் புதுப்பித்துக் கொள்ளுமாறு அமைக்கப்பட்டுள்ளது
இக்காமாவின் காலாவதி எவ்வாறு தெரிந்து கொள்வது?
அப்சர் கணக்கு உங்களிடம் இருந்தால் அதன் மூலமாகவும் அல்லது தொழிலாளர் அமைச்சகத்தின் இணையதளம் மூலமாகவும் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்
காலாவதியான இக்காமாவின் புதுப்பிக்கும் நடைமுறைகள்?
நீங்கள் ஒரு நிறுவனத்திலோ அல்லது கபீல்களின் கீழ் வேலை செய்யக் கூடியவர்களாக இருந்தால் அவர்களே உங்களின் இக்காமா ஒன்று அல்லது இரண்டு வருடங்களுக்கு ஆன்லைனில் புதுப்பித்துக் தருவார்கள்
காலாவதியான இக்காமா விற்கு விதிக்கப்படும் அபராதம்?
சவுதி அரேபியாவின் இருக்கக்கூடிய ஜவாசத் சட்டத்தின்படி முதல் சந்தர்ப்பத்தில் புதுப்பிக்க தவறினால் 500 ரியால் அபராதமும் மற்றும் இரண்டாவது சந்தர்ப்பத்தில் புதுப்பிக்க தவறினால் அபராதங்கள் இரட்டிப்பாகும்
இக்காமா வின் நிறம் மற்றும் நிதாகத் என்றால் என்ன?
அதாவது நிதாகத் என்பது சவுதி சேஷன் என்று சொல்லக்கூடிய திட்டமாகும் அந்த திட்டத்தின் மூலம் சவுதி அரசாங்கம் சவுதி குடி மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் பொருட்டு சவுதி அரேபியாவில் உள்ள அனைத்து நிறுவனங்களுக்கும் சவுதி சேஷன் அளவை அடிப்படையாகக் கொண்டு நிறங்களை வழங்குகிறது
பிளாட்டினம் (உயர்ந்த நிலை) இந்த மாதிரி நிறத்தில் உள்ள கம்பெனிக்கு பிரச்னை இல்லை
பச்சை (சராசரி நிலை)
மஞ்சள் ( அபாய நிலை)
சிவப்பு (கீழ்நிலை)
இக்காமா வின் பதிவு செய்யப்பட்ட புகைப்படத்தை மாற்றலாமா?
கண்டிப்பாக மாற்ற முடியும் புகைப்படத்தை மாற்றுவதற்கு ஜவாசத் என்ற அலுவலத்திற்கு சென்று உங்களின் புகைப்படத்தை புதுப்பித்துக் கொள்ளலாம்
நக்கல் கபாலா அதாவது இக்காமா பரிமாற்றம் என்றால் என்ன?
உங்களுக்கும் உங்கள் ஸ்பான்சர்ஷிப் இருக்கும் இருக்கக்கூடிய சில நிபந்தனைகளில் அடிப்படையில் சவுதி அரேபியாவில் ஒரு ஸ்பான்சர்ஷிப் இடம் இருந்து இன்னொரு மாற்றலாம்
ஸ்பான்சர்ஷிப் மாற்றுவதற்கு சில கட்டணங்கள் செலுத்தப்பட வேண்டும்
ஷீரூப் என்றால் என்ன?
ஒரு நிறுவனமோ அல்லது தனது ஊழியர் மீது ஓடிப்போன புகாரை பதிவு செய்தால் அதை ஷூருப் என்பார்கள் அதைத் தொடர்ந்து அவர் சவுதி அரேபியாவில் சட்டவிரோதமாக வசிப்பவர்களாக மாறிவிடுவார்
- உங்களின் இக்காமா ரத்து செய்யப்படும்
- நீங்கள் சவுதி அரேபியாவில் தங்கியிருப்பது சட்டவிரோதமாகும்
- உங்களால் இந்த நாட்டு சட்டத்தை அணுக முடியாது மற்றும் அதனால் கிடைக்கக்கூடிய நன்மைகள் மற்றும் உரிமைகள் ரத்து செய்யப்படும்
- நீங்கள் சவூதி அரேபியாவில் மீண்டும் உன்னுடைய 5 ஆண்டுகள் தடை செய்யப் படுவீர்கள்
தவறுதலாக பதிவு செய்யப்பட்ட பெயரை சரி செய்ய முடியுமா ?
ஆம் முடியும் ஜவாசத் என்ற அலுவலகத்தில் சென்று பெயரை சரி செய்து கொள்ள முடியும் ஆனால் நீங்கள் ஒரு நிறுவனத்தின் அல்லது கபீல்களின் கீழ் பணி செய்யக் கூடியவராக இருந்தால் நீங்கள் அவரிடம் புகார் தெரிவிப்பதன் மூலம் அவர்களே ஜவாசத்திற்கு சென்று அல்லது இணையதளம் மூலம் அதை சரி செய்து கொடுப்பார்கள்
நன்றி
Comments
Post a Comment
Thanks for comments