மொபைல் பயன்படுத்தும் பலர் இந்த 10 Trick use பன்னியிருக்க வாய்ப்பில்லை



ஸ்மார்ட்போன் கேமராவை டெலஸ்கோப்பாக மாற்றலாம்

இது நம் பலரின் யோசனைக்குள் உதித்த ஒரு எளிய தந்திரம், கூடவே சிறு பயனுள்ள ஒரு தந்திரமும் ஆகும். வெறுமனே உங்கள் ஸ்மார்ட்போனின் கேமராவின் முன் ஒரு லென்ஸை வைக்க அது தொலைதூர பார்வையை கொடுக்கும். இது மற்ற பக்கத்தில் ஒரு விரிவான புகைப்படத்தைப் பதிவு செய்யவும் உதவும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஸ்மார்ட்போன் கேமராவை மைக்ரோஸ்க்கோப்பாக மாற்றலாம்

ஸ்மார்ட்போன் கேமராவை டெலஸ்கோப் ஆக மாற்றுவதை போன்றே இதுவும் மிகவும் சுலபம் தான். உங்கள் தொலைபேசியின் கேமராவில் சிறிய லென்ஸை இணைத்தால் போதும். உங்கள் ஸ்மார்ட்போன் ஒரு கையடக்க, டிஜிட்டல் நுண்ணோக்கியாக மாறிவிடும். இந்த அற்புதமான ஹேக் ஆனது மைக்ரோ கண்களின் வழியாக இந்த உலகை ஆராய்ந்து, அழகான புகைப்படங்களை எடுக்க உதவும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.

வெப்ப கேமராவாக பயன்படுத்தப்படலாம்

இராணுவம் மற்றும் பிற வல்லுநர்களுகாக கண்டுபிடிக்கப்பட்ட சீக தெர்மல் தொழில்நுட்பமானது தற்போது அனைவர்க்கும் கிடைக்கிறது. இது உங்கள் தொலைபேசியுடன் இணைக்கபடக்கூடிய இந்த சிறிய கேமரா ஆனது, உங்களைச் சுற்றியுள்ள எல்லாவற்றையுமே ஒரு வெப்ப படமாக பதிவு செய்ய அனுமதிக்கிறது.
ஆப் இல்லாமல் உங்கள் 

ஸ்மார்ட்போனை AR மேப் ஆக மாற்றலாம்

இதற்கு எந்தவிதமான ஆப்பையும் பதிவிறக்கம் செய்ய வேண்டியது இல்லை. வெறுமனே கார் கண்ணாடியின் அருகில் உங்கள் ஸ்மார்ட்போனில் கூகுள் மேப்ஸ் பயன்பாட்டை ஓபன் செய்து வைத்து விட்டால் போதும். கண்ணாடியின் பிரதிபலிப்பின் விளைவாக ஆகுமென்டட் ரியாலிட்டி போன்ற மேப் தயாராகிவிடும். மொபைலை பார்த்துக்கொண்டே ரிஸ்க் எடுத்து வண்டி ஓட்டும் விபரீதம் இனி வேண்டாம்.

பார் குறியீடுகளை ரீட் செய்ய முடியும்

பார் குறியீடுகளை மட்டுமல்ல உங்கள் ஸ்மார்ட்போன் ஆனது க்யூஆர் குறியீடுகளையும் கூட ரீட் செய்யும். அனைத்து பெரிய கடைகளிலும், பொருட்களின் விவரங்களை வழங்கும் ப்ரீ பார்கோட் ரீடர்கள் இருக்கும். அது உதவவில்லை என்றால் ரெட்லேசர் போன்ற ஆப்களை பதிவிறக்கம் செய்து வைத்து கொள்ளலாம்.

ஸ்மார்ட்போன் வழியாக இதய துடிப்பை பார்க்க முடியும்

இன்ஸ்டன்ட் ஹார்ட் ரேட் (ஐஓஎஸ், ஆண்ட்ராய்டு மற்றும் விண்டோஸ்) போன்ற பயன்பாடுகளின் டெவலப்பர்கள் உங்கள் ஸ்மார்ட்போன் கேமரா மூலம் உங்கள் இதய துடிப்பின் அளவை அளவிட முடியும் என்று கூறுகின்றனர். கேமராவின் முன் உங்கள் விரலை வைக்க வேண்டும் பின், குறிப்பிட்ட ஆப் ஆனது இரத்த துடிப்பு காரணமாக உங்கள் தோல் நிறத்தில் நடக்கும் சிறிய மாற்றங்களை கண்காணிகுமாம். பின்னர் சிறிது நேரம் கழித்து, அது உங்கள் இதய துடிப்பின் காட்சிப்படுத்துமாம்.

பழைய நெகடிவ் ரோல்களை டிஜிட்டைஸ் ஆக்கலாம்

போட்டோ நெகடிவ்களை ஸ்கேன் செய்து டிஜிடைஸ் செய்ய இது ஒரு சிறந்த வழி அல்ல, என்றாலும் கூட அவசரமாக குறிப்பிட்ட நெகடிவ்களை பார்க்க அல்லது பதிவு செய்ய வேண்டும் என்றால் ஸ்மார்ட்போன் உதவலாம். ஹெல்முட் (HELMUT)பிலிம் ஸ்கேனர் போன்ற சில பயன்பாடுகளைப் பயன்படுத்தவும் முயற்சிக்கலாம்.
எல்லா பொருட்களையும் அடையாளம் காண உதவும் கேமரா
புதிய செயல்பாடான கூகுள் லென்ஸின் வழியாக புகைப்படம் கொண்டு குறிப்பிட்ட உணவகத்தையும், அதன் மதிப்பீடுகள் மற்றும் மதிப்புரைகள் பற்றிய தகவலை பெறலாம். வாட்திபாண்ட் (WhatTheFont) போன்ற ஆப் மூலம் படத்தை ஸ்கேனிங் செய்வது மூலம் குறிப்பிட்ட எழுத்துருக்களை கண்டறியலாம் சொல்ல முடியும்.

வீடியோ ரெகார்ட் செய்துகொண்டே புகைப்படங்கள் எடுக்கலாம்

வீடியோ ரெகார்ட் பட்டனுக்கு அடுத்ததாக காட்சிப்படும் ஷட்டர் பட்டனை அழுத்த வேண்டும். அவ்வளவுதான், இந்த வழிமுறையின் கீழ் புகைப்படம் எடுப்பது வழக்கமான புகைப்படமாக இருக்காது. ஏனெனில் அது வீடியோ கேமரா உணரிகளின் பின்னணியில் பதிவாகிறது. ஆனாலும் கூட அவசரதிற்கு ஒரு புகைப்படம் கிடைக்கும்.

கேமரா மூலம் AR ரூலர் ஆப்
அளவுகோலாக பயன்படுத்தலாம்.

ரூலர் ஆப் (Ruler App) போன்ற பயன்பாடுகள் குறிப்பிட்ட படத்தில் இருக்கும் பொருளின் அளவை அளவிடுவதற்கு பயன்படுகிறது. இந்த ஆப் ஆனது ஒரு அறை அல்லது நாற்காலி போன்ற பொருட்களின் பகுதிகளை அளவிட போதுமானதாக இருக்கிறது.

சீக்ரெட் டிப்ஸ்

உங்கள் தொலைபேசியின் ஆயுளை அதிகரிக்க இந்த டிப்ஸ் மிகவும் உதவியாய் இருக்கும், உங்கள் ஸ்மார்ட்போனின் ஆயுள் காலம் குறைய நிறைய காரணங்கள் உள்ளது. அதில், சார்ஜிங் போர்டில் தூசு, குப்பைகள், மற்றும் பிற துகள்கள் சேர்வதும் ஒன்றாகும். இந்த காரணம் ஆனது ஸ்மார்ட்போனின் ஆயுட்காலத்தை குறைப்பது முதல் அது இயங்காமல் செய்வது வரை போன்ற சிக்கல்களை ஏற்படுத்தும்.
ஸ்மார்ட்போனுக்கு ஒரு ஊசி போட்ட எல்லாம் சரியா போகும்
இதனை சரி செய்ய ஒரு வழிமுறை இருக்கிறது. வெறுமனே காற்று இழுக்கப்பெற்ற ஒரு ஊசியை எடுத்து, சார்ஜ் போர்ட்டிற்குள்நுழைத்து இன்ஜெக்ட் செய்யவும் (காற்றை வெளியேற்றவும்). இப்படி செய்வதால் போர்ட்டில் உள்ள மிக மிக சிறிய தூசி மற்றும் துகள் வெளியேறும். சிம்பிள்!

Comments

Popular posts from this blog

Tawakkalna login without application

Saudi Arabia 1 August 2021 New Rule

Saudi to Tamilnadu passenger