India to Qatar travel passenger இந்தியாவிலிருந்து கத்தார் செல்லும் பயணிகள்

 இந்தியாவிலிருந்து ✈️ கத்தார் 

https://anandham.blogspot.com/?m=1

*ஜூலை 12 முதல் இந்திய நாட்டினருக்கான புதிய பயண வழிகாட்டுதல்களை வெளியிட்டது கத்தார் அரசு.* 

 

கத்தாருக்குள் நுழைய ஜூலை 12 முதல் இந்திய நாட்டினருக்கான  குடும்ப (Family Visit Visa), சுற்றுலா (Tourist Visa)  வைத்திருப்பவர்களுக்கு புதிய பயண வழிகாட்டுதல்கள் பின்வருமாறு:

 

✅. *தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு:* 


கோவிஷீல்ட் உள்ளிட்ட கத்தார் அரசு அங்கீகரிக்கப்பட்ட  தடுப்பூசிகளுடன் முழுமையான/தேவையான தடுப்பூசி டோஸை நிறைவு செய்த குடியுரிமை அனுமதி வைத்திருப்பவர்கள், குடும்ப வருகை, சுற்றுலா மற்றும் வணிக விசா வைத்திருப்பவர்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு. 

👨‍👩‍👧‍👦 0-11 வயதுடைய குழந்தைகள் தடுப்பூசி போடாவிட்டாலும் கூட விலக்கு அளிக்கப்படுகிறார்கள்.

 

⚠️ *தடுப்பூசி போடாத குழந்தைகளுக்கு 10நாட்கள் தனிமைப்படுத்தல்:* 


தடுப்பூசி போடப்பட்ட 18வயது மேலுள்ளவர்களுடன் இருக்கும்  12-17 வயதுடைய குழந்தைகள் கட்டாய 10நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

தனிமைப்படுத்தலில் குழந்தையுடன் தங்க ஒரு பெற்றோர் அனுமதிக்கப்படுவர். (இதில் ஏதாவது மேலதிக தகவல் வரும்போது Update செய்கிறேன்)


✈️ பயணத்திற்கு 72 மணிநேரத்திற்குள் உள்ள

 RTPCR Test Negative Reportஐ அனைத்து பயணிகளும் சமர்ப்பிக்க வேண்டும்.


✈️ பயணிகள் குறைந்தபட்சம் 12 மணிநேரத்திற்கு முன்னதாக www.ehteraz.gov.qa இல் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும்.


⚠️ பயணிகள் செலவில், On Arrival RTPCR Test எடுக்க வேண்டும். அதில் Positive வந்தால் பயணிகள் தனிமைப்படுத்தப்படுவார்கள்.

Comments

Popular posts from this blog

சவூதி விசா மற்றும் இக்கமா சலுகை

Before boarding Important thinks

unwanted 11 app இந்த 11 ஆப் உங்கள் மொபைலில் டவுன்லோட் செய்திருந்தால் டெலிட் செய்யவும்