ஒரே மொபைலில் இரண்டு வாட்ஸ்அப் உபயோக படுத்துவது எப்படி how to use 2 WhatsApp 1 mobile
இந்த அம்சத்தைப் பயன்படுத்த தங்களது ஸ்மார்ட்போன்களில் டூயல் ஆப்ஸ், குளோன் ஆப் அல்லது டூயல் மோட் என்ற அம்சம் கைபேசி settings இருக்கும். இந்த அம்சம் இல்லாத போன்களில் பிளே ஸ்டோரிலிருந்து வாட்ஸ்அப் குளோன் என்ற ஆப்பை பதிவிறக்கம் செய்து, இதன் மூலம் தனித்தனி வாட்ஸ்அப் கணக்குகளை பயன்படுத்தி கொள்ளலாம்.
தனித்தனி வாட்ஸ்அப் கணக்குகளை தொடங்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
ஸ்டெப் 1: பிளே ஸ்டோர் மூலம் வாட்ஸ் ஆப்பை பதிவிறக்கம் செய்ய வேண்டும்
ஸ்டெப் 2: இதற்குமுன்னதாக உங்கள் போனில் வாட்ஸ் ஆப் இருந்தால் ஸ்டப் 1 கிளிக் செய்வதை skip செய்யவும்.
ஸ்டெப் 3: டூயல் அப்/ குளோன் அப் / டூயல் மோட்/ அப் ட்வின் இவற்றில் ஏதேனும் ஒன்றுக்கு சென்று பிறகு அதன் மீது கிளிக் செய்யவும்
ஸ்டெப் 4: இங்கு வாட்ஸ்அப் ஆப்ஷனை கிளிக் செய்து, இன்ஸ்டால் செய்யவும்.
ஸ்டெப் 5: இப்பொழுது இரண்டாம் நிலை வாட்ஸ் அப்பை ஓப்பன் செய்லாம்.
ஸ்டெப் 6: உங்களது 2வது வாட்ஸ் ஆப் நம்பரை கொடுத்து ஆக்டிவிட்டி ஆப்ஷனை க்ளிக் செய்யவும். பின்னர் ஃபைல்ஸ் மற்றும் காண்டாக்ட்ஸ்களை வாட்ஸ் அப்புக்குள் அக்சஸ் செய்யவும்.
ஸ்டெப் 7: இப்பொழுது உங்களின் 2வது வாட்ஸ்அப் எண்ணை பதிவு செய்யும்படி கேட்கும். இங்கு நீங்கள் மறக்காமல் உங்களின் இரண்டாம் நிலை வாட்ஸ்அப் எண்ணை (secondary whatsup number)பதிவு செய்ய வேண்டும்.
இவை எல்லாவற்றையும் செய்தபின் இப்பொழுது நீங்கள் உங்களின் ஒரே ஸ்மார்ட்போனில் இரட்டை வாட்ஸ்அப்பை உபயோகிக்க தொடங்கலாம்.
கீழே கொடுக்கப் பட்டுள்ள மொபைல் பிராண் ட்களில் கீழ் கண்ட பெயரில் இருக்கும்
சாம்சங் - இந்த அம்சம் சாம்சங் போனில் டூயல் மெசஞ்சர் என்ற பெயரில் காணப்படுகிறது.
ஒப்போ- குளோன் ஆப் என்று பெயரில் இருக்கும்.
விவோ- குளோன் அப்ளிகேஷன் என்ற பெயரில் இருக்கும்
சியோமி - இந்த போனில் டூயல் ஆப்ஸ் என்று இருக்கும்.
ஆசஸ், ஹவாய் - இந்த இரண்டு ஸ்மார்ட் போன்களிலும் ஆப் ட்வின் என்ற பெயரில் இருக்கும்.
Comments
Post a Comment
Thanks for comments