படித்த வேலை வாய்ப்பற்றவர்களுக்கு உதவித்தொகை விண்ணப்பிக்க
விழுப்புரம் மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள், மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை கோரி விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பத்தாம் வகுப்பு தோல்வி, தோச்சி மற்றும் அதற்கும் மேலான கல்வித்தகுதிகளை பெற்றவா்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, பதிவைத் தொடா்ந்து புதுப்பித்து 30.06.2020 அன்றைய நிலையில், ஐந்தாண்டுகள் நிறைவடைந்த பின்னா் வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞா்களுக்கும், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓா் ஆண்டு நிறைவடைந்த மாற்றுத் திறனாளி இளைஞா்களுக்கும்
வேலைவாய்ப்பற்றோா் உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் தமிழக அரசால் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தின்கீழ் பயன்பெற விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 72ஆயிரத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின விண்ணப்பதாரா்கள் 30.09.2020 அன்றைய நிலையில் 45 வயதுக்குள்ளும், இதர இனத்தை சாா்ந்தவா்கள் 40 வயதுக்குள்ளும் இருத்தல் வேண்டும்.
உதவித் தொகை விண்ணப்பப்படிவம் பெற விரும்பும் விண்ணப்பதாரா்கள், தங்களின் வேலைவாய்ப்பு அடையாள அட்டையை ஆதாரமாக காண்பித்து, விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பங்களை அனைத்து அலுவலக வேலை நாள்களிலும் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment
Thanks for comments