Patta பட்டா மகிழ்ச்சியான செய்தி இதை படியுங்கள்
மகிழ்ச்சியான செய்தி
ஆகஸ்ட் 1 ம் தேதி முதல் , பத்திரபதிவு செய்பவர்களுக்கு பட்டா தானாகவே மாறிவிடும்!
தமிழகத்தில் வீடு, மனை, நிலங்களை வாங்குபவர்கள் சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு செய்ய வேண்டும் என்பது நடைமுறையில் இருக்கிறது. நிலம் அல்லது வீட்டை வாங்கியவர்கள் பட்டாவை தன் பெயரில் மாற்றுவதற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
அதற்கு இனிமேல் கவலை இல்லை
அந்த சொத்தில் முழு உரிமை உள்ளவரா, அந்த சொத்துக்களில் வில்லங்கம் இருக்கிறதா என்பதை அறிந்த பின்னர் தாசில்தார் ஆய்ந்து பட்டா வழங்குவார். தற்போது புழக்கத்தில் இருந்த இந்த நடைமுறையால் பட்டாவிற்கு விண்ணப்பம் செய்வோர் நிறைய அலைச்சல்களை சந்திக்க வேண்டியிருந்தது.
இதை தவிர்க்க சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு செய்வதன் மூலம் தானாக பட்டா மாறுதல் ஆகும் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்நிலையில். ஆகஸ்ட் 1ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பத்திரப்பதிவு செய்த உடன் தானாக பட்டா மாறுதல் திட்டம் நடைமுறைக்கு வருகிறது.
இந்த புதிய திட்டத்தின் படி சொத்தை பதிவு செய்தவர்கள் அந்த சொத்தில் முழு உரிமை உள்ளவரா, அந்த சொத்துக்களில் வில்லங்கம் இருக்கிறதா, முழு அதிகாரம் அந்த சொத்தில் அவருக்கு உள்ளதா, அவர் மீது வேறு சொத்துக்கள் உள்ளதா, அதற்கான பட்டா இருக்கிறதா என ஆன்லைன் மூலமே ஆய்வு மேற்கொண்டு தானாக பட்டா மாறுதல் ஆகிவிடும் என்று கூறுகிறார்கள் அதிகாரிகள்..
Comments
Post a Comment
Thanks for comments