ஜமாபந்தி என்றால் என்ன?எப்படி ஆன்லைனில் விண்ணப்பிப்பது?
ஜமாபந்தி ஆண்டு தோறும் ஜூன் மாதத்தில் வருவாய்த் துறையினரால் கிராமந்தோறும் நடத்தப்படும் கிராம கணக்குகள் குறித்த தணிக்கை முறையாகும். இந்த வருவாய் தீர்வாயத்தில் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிருவாக அலுவலர் ஆகியோர் கலந்து கொள்வார்கள் வருவாய் தீர்வாயத்தின் போது கூடுதலாக கிராம மக்கள் தங்கள் மற்றும் தங்கள் கிராம குறைகளை தீர்க்க மனு தரலாம் ஜமாபந்தியில் எதற்காக மனு அளிக்கலாம்? பட்டா, சிட்டா, அடங்கல் குறித்தான விவரங்கள் கேட்டு மனுக்கள் தரலாம். குடிநீர் வசதி, சாலை வசதி, மயான வசதி, கழிவு நீர் சாக்கடை வசதி முதலிய தேவைகள் குறித்தும் வருவாய்த்துறை அலுவலர்களிடம் முறையிடலாம். இலவச மனை பட்டா வேண்டி விண்ணப்பிக்கலாம். வீட்டு மனை உடையவர்கள் வீடு கட்ட அரசு கடன் மற்றும் மானியம் கோரி விண்ணப்பிக்கலாம். குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் ஆதரவற்ற விதவைகள் மற்றும் முதியோர் ஒய்வூதியம், என்று உங்கள் கோரிக்கைகளை மனுவாக அளிக்கலாம் இந்த வருவாய் தீர்வாயத்தில் பொதுமக்களின் நியாயமான கோரிக்கை மனு...