இனி சிறு வணிக நிறுவனங்கள் GPay மூலம் கடன் பெற முடியும் எப்படி தெரயுமா
வணிகங்கள் 'கூகுள் பே ஃபார் பிசினஸ்' மூலம் நிதி நிறுவனங்களிடம் இருந்து கடன் உதவி பெற உதவும் வகையில் நிதி நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட உள்ளதாக கூகுள் இந்தியா அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக சிறு நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிறுவனங்கள் மீண்டெழுந்து தங்களது வணிகங்களை மீண்டும் கட்டமைக்க உதவுவதற்காக கூகுள் பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சேவையும் அந்த முயற்சிகளின் ஒரு பகுதியாகும்.
“மூன்று மில்லியனுக்கும் அதிகமான வர்த்தகர்கள் தற்போது டிஜிட்டல் மூலம் கட்டணங்கள் செலுத்தவும் பெறவும் கூகுள் பே ஃபார் பிசினஸ் பயன்படுத்தி வருகின்றனர்.கூடிய விரைவில் இந்த வசதி வழங்கப்படும் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் கூகுள் ‘Grow with Google Small Business hub’ என்கிற பிரிவையும் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது சிறு நிறுவனங்கள் டிஜிட்டலில் செயல்படுவதற்குத் தேவையான அனைத்தையும் ஒரே இடத்தில் பெற உதவும் மையமாக விளங்கும். வணிக நடவடிக்கைகளைத் தொடர இது உதவும். அத்துடன் டிஜிட்டல் திறன்களைப் பெறத் தேவையான வீடியோக்கள், சப்போர்ட் பக்கங்கள் உள்ளிட்ட வளங்களும் கிடைக்கும். விரைவில் இந்த சேவை இந்தி மொழியிலும் கிடைக்கும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது மட்டுமல்லாது வணிகங்களுக்கு உதவும் வகையில் ‘Promoted pins’ என்கிற புதிய வசதியும் கூகுள் மேப்பில் வழங்கப்பட உள்ளது. வாடிக்கையாளர்கள் வசதியாக ஷாப்பிங் செய்ய உதவும் வகையில் தனித்துவமான சேவை வழங்கப்படும் பட்சத்தில் வணிக உரிமையாளர்கள் அது குறித்து தெரிவிக்கலாம்.
“புரொமோடட் பின்ஸ் சேவையை அறிமுகப்படுத்தத் தொடங்கியுள்ளோம். வரும் வாரங்களில் முழுவீச்சில் அறிமுகப்படுத்தப்படும். 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை ப்ரொமோடட் பின்ஸ் மூலம் கிடைக்கப்படும் அழைப்புகள் அல்லது விற்பனைகளுக்கு வணிகங்கள் கட்டணம் செலுத்தவேண்டிய அவசியமில்லை,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.தற்போது சிறிய, நடுத்தர என அனைத்து அளவுகளிலும் செயல்படும் வணிகங்களும் Meetஎன்கிற ப்ரீமியம் வீடியோ மீட்டிங் சேவையை இலவசமாகப் பெறலாம். இதுதவிர கூகுள் டிரைவ், டாக்ஸ், ஷீட்ஸ், ஸ்லைட்ஸ் ஆகியவற்றின் ப்ரொஃபஷனல்-கிரேட் வெர்ஷனும் செப்டம்பர் 30-ம் தேதி வரை இலவசமாக வழங்கப்பட உள்ளது.
“டிஜிட்டல் ரீதியாக செயல்படும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்குத் தடையாக இருக்கக்கூடிய அம்சங்களை நீக்கித் தீர்வளிப்பதில் தொடர்ந்து முதலீடு செய்து வருகிறோம். ஒவ்வொரு மாதமும் இத்தகைய வணிகங்கள் மற்றும் வாடிக்கையாளார்கள் இடையே அழைப்புகள், ஆன்லைன் முன்பதிவுகள், திசை காட்டலுக்கான கோரிக்கைகள் என 150 மில்லியனுக்கும் அதிகமான நேரடி தொடர்புகளை ஊக்குவிக்கிறோம்,” என்று குறிப்பிட்டார் கூகுள் நிறுவனத்தின் இந்திய வாடிக்கையாளர் தீர்வுகள் இயக்குநர் ஷாலினி கிரீஷ்.எனினும் தற்போதுள்ள கோவிட்-19 பெருந்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக அதிகளவிலான வணிகங்கள், குறிப்பாக சிறு வணிகங்கள் விரைவாக மீண்டெழுவதற்கு தொழில்நுட்பத்தைத் தழுவவேண்டிய அவசியத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் ஷாலினி கிரீஷ் தெரிவித்தார்.
“வெவ்வேறு வணிகங்கள் வெவ்வேறு நிலைகளில் மீண்டெழும். பல வணிகங்களுக்கு டிஜிட்டல் உலகில் செயல்படுவது கடினமான அனுபவத்தை ஏற்படுத்தலாம். எங்களது ‘டிஜிட்டல் அன்லாக்ட்’ திட்டத்தின் மூலம் இந்தியாவில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான வணிகங்களும் தனிநபர்களும் டிஜிட்டல் திறன் பெற உதவியுள்ளோம் என்பதில் பெருமைகொள்கிறோம்,” என்று குறிப்பிட்ட ஷாலினி கிரீஷ் இந்த முயற்சி வரும் நாட்களில் மேலும் இரட்டிப்பாகும் என்றும் தெரிவித்தார்
Comments
Post a Comment
Thanks for comments