HOW TO CHECK SBI BANK BALANCE


நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, வாடிக்கையாளர்களுக்கு தங்களது சேவையினை எளிதாக்கும் வகையில் பல சேவைகளை அளித்து வருகிறது.

அதிலும் தற்போது தனியார் வங்கிகள் கூட ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவுடன் போட்டி போட முடியாமல் தவித்து வருகின்றன.

அந்த வகையில் இன்று நாம் பார்க்கவிருப்பது எஸ்பிஐ-யில் எப்படி உங்களது பேலன்ஸினை தெரிந்து கொள்ளலாம். அதிலும் இண்டர்நெட்டினை பயன்படுத்தாமல் எப்படி தெரிந்து கொள்ளலாம் வாருங்கள் அதனை பற்றித் தான் பார்க்க இருகிறோம்.

எஸ்பிஐ சேமிப்பு கணக்கு அல்லது வேறு எந்த வகையான கணக்கு வைத்திருந்தாலும், ஒரு மிஸ்ட் கால் மூலம் தங்களது வங்கி கணக்கில் உள்ள இருப்பு தொகையை சரிபார்த்துக் கொள்ளலாம்


எஸ்பிஐ-யின் balance inquiry number 09223766666 மூலம் எஸ்பிஐ வங்கி கணக்கு வைத்திருப்பவர் mini statement மற்றும் கணக்கு தொடர்பான இதர விவரங்களையும் அறிந்து கொள்ள முடியும்.

SBI Quick app

எஸ்பிஐ-யின் SBI Quick app மூலமாக நாம் இணைய வங்கியினை பயன்படுத்தாமலேயே வங்கி இருப்பு தொகையினை தெரிந்து கொள்ள முடியும். இந்த சேவையினை பயன்படுத்த எஸ்பிஐ-யில் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பரினை மட்டுமே பயன்படுத்த முடியும்.

உங்களது ஸ்மார்ட்போனில் SBI Quick ஆப்பை பதிவிறக்கம் செய்துக் கொள்ள வேண்டும். பதிவிறக்கம் செய்த பின்பு லாகின் செய்து கொள்ளவும். இந்த SBI Quick ஆப்பில் உள்ள வசதிகளை பயன்படுத்த இணைய சேவை தேவை இல்லை. ஏனென்றால் அனைத்து விவரங்களையும் ஒரு மிஸ்டு கால் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

SBI SMS Banking and mobile services

இந்த சேவையினை பயன்படுத்திக் கொள்ள எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் அவர்களது வங்கிக் கணக்கினை கொடுத்து பதிவு செய்து கொள்ள வேண்டும். இதனை வாடிக்கையாளர்கள் REG Account number 09223488888 என்ற எண்ணிக்கு அனுப்ப வேண்டும். உதாரணத்திற்கு REG என டைப் செய்து, அதனை தொடர்ந்து உங்களது வங்கி கணக்கு எண்ணினை டைப் செய்து 1234566788980 அனுப்ப வேண்டும். அதாவது REG 1234566788980 என்று அனுப்ப வேண்டும். இதன் பிறகு உங்களுக்கு கன்பர்மேஷன் செய்தியொன்று கிடைக்கும்



Comments

Popular posts from this blog

சவூதி விசா மற்றும் இக்கமா சலுகை

Before boarding Important thinks

unwanted 11 app இந்த 11 ஆப் உங்கள் மொபைலில் டவுன்லோட் செய்திருந்தால் டெலிட் செய்யவும்