ஜமாபந்தி என்றால் என்ன?எப்படி ஆன்லைனில் விண்ணப்பிப்பது?




ஜமாபந்தி ஆண்டு தோறும் ஜூன் மாதத்தில் வருவாய்த் துறையினரால் கிராமந்தோறும் நடத்தப்படும் கிராம கணக்குகள் குறித்த தணிக்கை முறையாகும். 
இந்த வருவாய் தீர்வாயத்தில் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிருவாக அலுவலர் ஆகியோர் கலந்து கொள்வார்கள்
வருவாய் தீர்வாயத்தின் போது கூடுதலாக கிராம மக்கள் தங்கள் மற்றும் தங்கள் கிராம குறைகளை தீர்க்க மனு தரலாம்

ஜமாபந்தியில் எதற்காக மனு அளிக்கலாம்? 

  • பட்டா, சிட்டா, அடங்கல் குறித்தான விவரங்கள் கேட்டு மனுக்கள் தரலாம். 
  • குடிநீர் வசதி, சாலை வசதி,  மயான வசதி, கழிவு நீர் சாக்கடை வசதி முதலிய தேவைகள் குறித்தும் வருவாய்த்துறை அலுவலர்களிடம் முறையிடலாம். 
  • இலவச மனை பட்டா வேண்டி விண்ணப்பிக்கலாம். 
  • வீட்டு மனை உடையவர்கள் வீடு கட்ட அரசு கடன் மற்றும் மானியம் கோரி விண்ணப்பிக்கலாம். 
  • குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்
  • ஆதரவற்ற விதவைகள் மற்றும் முதியோர் ஒய்வூதியம், என்று உங்கள் கோரிக்கைகளை மனுவாக அளிக்கலாம்
  • இந்த வருவாய் தீர்வாயத்தில் பொதுமக்களின் நியாயமான கோரிக்கை மனுக்கள் உடனடியாக வருவாய்த்துறையினரால் நிறைவேற்றப்படும்
இந்த ஆண்டு ஏன் ஆன்லைனில் விண்ணப்பம்

கொரோனாவால் ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால் மக்கள் கூட்டமாக கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.அவர்களிடம் நேரிடையாக மனுக்கள் பெற இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது. 

எனவே பொதுமக்கள் தங்கள் கோரிக்கை சம்பந்தமான மனுக்களை ஜூன் 29 ம்தேதி முதல் ஜூலை 15 ம்தேதி வரை இ-சேவை மையம் மூலமாகவோ அல்லது நீங்கள்  ஆன்லைன் மூலம் மனு அளிக்கலாம்

எப்படி ஆன்லைனில் விண்ணப்பிப்பது

  • முதலில் மேல் உள்ள லின்ங் கிளிக் செய்து கொள்ளுங்கள்
  • அடுத்து அதில் ONLINE PETITION INDIAN CITIZENS என்ற மூன்றாவது பட்டனை அழுத்துங்கள்
  • அடுத்து உங்கள் மொபைல் எண் பதிவு செய்தால் உங்கள் மொபைல் போனுக்கு வரும் ஓடிபி போட்டு உள் நுழையவும்
  • அடுத்ததாக  உங்கள் கோரிக்கை மற்றும்  நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசுத்துறை, உங்கள் மாவட்டம், தாலுகா, வருவாய் கிராமம் ஆகிய விவரங்களை பதிவு செய்ய வேண்டும். 
  • அடுத்து உங்கள் கோரிக்கையை சரிபார்த்துவிட்டு அனைத்தும் சரியாக இருந்தால் சப்மிட் கொடுங்கள் அவ்வளவுதான்
  • அடுத்து உங்கள் போனுக்கு உங்கள் கோரிக்கை எண் வரும் அந்த எண்னை பத்திரபடுத்தி வைத்துகொள்ளுங்கள் அதனை வைத்து உங்கள் கோரிக்கையின் நிலை என்ன என்று சரிபார்த்து கொள்ளலாம்

Comments

Popular posts from this blog

சவூதி விசா மற்றும் இக்கமா சலுகை

Before boarding Important thinks

unwanted 11 app இந்த 11 ஆப் உங்கள் மொபைலில் டவுன்லோட் செய்திருந்தால் டெலிட் செய்யவும்