வாகன insurance எது சிறந்தது
நாம் இன்று எதற்காக இன்சூரன்ஸ் செய்கிறோமோ இல்லையோ? நமது ஹெல்த்துக்காக கண்டிப்பாக இன்சூரன்ஸ் செய்தே ஆக வேண்டும். ஆனால் இதற்கு அடுத்தாற்போல் முக்கியத்துவம் பெறுவது இரு சக்கர வாகன காப்பீடு தான்.
ஒரு வேளை துரதிஷ்டவசமாக உங்களது வாகனம் விபத்திலோ அல்லது திருடப்பட்டாலோ, வேறு ஏதேனும் காரணத்தினால் சேதமானலோ அவற்றை உங்களால் சரி செய்ய முடியும் என்றால் அது இரு சக்கர வாகன இன்சூரன்ஸ் பாலிசியினாலேயே முடியும்.
பொதுவாக இருசக்கர வாகன இன்சூரன்ஸ் இரு வகைப்படும். ஒன்று விரிவான காப்பீடு, இரண்டாவது மூன்றாம் தரப்பு பொறுப்பு காப்பீடு.
விரிவான காப்பீடு
இந்த விரிவான காப்பீடுகள் ஒரு விரிவான பாதுக்காப்புடன் மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது.
இவ்வாறு காப்பீடு செய்யப்பட்ட வாகனம் தீ விபத்து வெடிப்பு, திருட்டு, விபத்து, இயற்கை பேரழிவுகள், பயங்கரவாத நடவடிக்கைகள் இப்படி பலவற்றையும் கவர் செய்கிறது.
மூன்றாம் தரப்பு காப்பீடு
இந்த வகையான காப்பீடு மூலம் மற்ற நபர்களின் வாகனத்திற்கோ அல்லது சொத்திற்கோ ஏற்படும் சேதத்திற்கான உங்கள் பொறுப்பை கவர் செய்கிறது. இந்த சேதமாவது மூன்றாம் தரப்பினர் வாகன சேதம், காயங்கள், மரணம் அல்லது வேறு ஏதேனும் சேதம் ஆகியவையாக இருக்கலாம். எனினும் இந்த காப்பீடு செய்யப்பட்ட ரைடருக்கும், அந்த இரு சக்கர வாகனத்துக்கும் இந்த பாலிசி கவர் ஆகாது.
ஆக ஒரு பாலியை தேர்தெடுக்கும் போது இதையெல்லாவற்றையும் கவனித்து, அதோடு பிரிமீயம், க்ளைம் தொக, க்ளைம் செய்வது எப்படி என்பன எல்லாவற்றையும் ஆராய்ந்து பாலிசி எடுப்பது நல்லது?
இந்த நிலையில் இந்தியாவில் சிறந்த இரு சக்கர வாகன காப்பீடு பற்றிய அறிக்கை பாலிசி பஜார்.காம் வெளியிட்டுள்ளது. அதன் படி இந்தியாவில் சில சிறந்த பாலிசிகளை எது என்பதை பற்றி பார்ப்போம்.
- பஜாஜ் அலையன்ஸ் டூ வீலர் இன்சூரன்ஸ் (bajaj allianz two wheeler insurance)
- பாரதி ஆக்ஸா இரு சக்கர வாகன காப்பீடு (Bharti AXA two wheeler insurance)
- டிஜிட் இரு சக்கர வாகன காப்பீடு (Digit two wheeler insurance)
- எடில்வைஸ் இரு சக்கர வாகன காப்பீடு (Edelweiss two wheeler insurance)
- ஹெஸ்டிஎஃப்சி எர்கோ இரு சக்கர வாகன காப்பீடு (HDFC ERGO two wheeler insurance)
- இஃப்கோ டோக்கியோ இரு சக்கர வாகன காப்பீடு (IFFCO tokio two wheeler insurance)
- கோடக் மகேந்திரா இரு சக்கர வாகன காப்பீடு (Kotak Mahindra two wheeler insurance)
- லிபர்டி இரு சக்கர வாகன காப்பீடு (Liberty two wheeler insurance)
- நேஷனல் இரு சக்கர வாகன காப்பீடு (National two wheeler insurance)
- நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் இரு சக்கர வாகன காப்பீடு (New india auusurance two wheeler insurance)
- நவி இரு சக்கர வாகன காப்பீடு (Navi two wheeler insurance)
- ஓரியண்டல் இரு சக்கர வாகன காப்பீடு (Oriental two wheeler insurance)
- ரிலையன்ஸ் இரு சக்கர வாகன காப்பீடு /(Reliance two wheeler insurance)
- எஸ்பிஐ இரு சக்கர வாகன காப்பீடு (SBI two wheeler insurance)
- ஸ்ரீ ராம் இரு சக்கர வாகன காப்பீடு (Shriram two wheeler insurance)
- டாடா ஏஐஜி இரு சக்கர வாகன காப்பீடு (TATA AIG two wheeler insurance)
- யுனைடெட் இந்தியா இரு சக்கர வாகன காப்பீடு (United india two wheeler insurance)
- யுனிவர்சல் சோம்போ இரு சக்கர வாகன காப்பீடு (Universal sompo two wheeler insurance)
Comments
Post a Comment
Thanks for comments