ஜோக்கர் என்ற கணினி வைரஸைப் புகுத்தி வந்த 11 செயலிகளை தன் ப்ளே ஸ்டோரிலிருந்து அதிரடியாக நீக்கியுள்ளது கூகுள் நிறுவனம். கடந்த 2017ஆம் ஆண்டிலிருந்து சில செயலிகளின் செயல்பாடுகளை ஆராய்ச்சியாளர்கள் உன்னிப்பாகக் கவனித்து வந்துள்ளனர். அவற்றில் 11 செயலிகள், 'ஜோக்கர் மால்வேர்' என்ற கணினி வைரஸால் தாக்கப்பட்டிருப்பதைக் கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உலகின் நம்பர் 1 தகவல் தொழில்நுட்ப நிறுவனமான கூகுளின் ப்ளே ஸ்டோர் உருவாக்கியுள்ள அனைத்துப் பாதுகாப்பு சுவர்களையும் மீறி அந்த செயலிகள் தாக்கப்பட்டதுதான் அந்த அதிர்ச்சிக்குக் காரணம். இந்த வைரஸ் மூலம், அந்த செயலிகளைப் பயன்படுத்துவோரின் முக்கிய விவரங்கள் அனைத்தையும் அவர்கள் அறியாமலேயே ஹேக்கர்களால் திருட முடியும். இதையடுத்து, கீழ்க்கண்ட அந்த 11 செயலிகளையும் கூகுள் நிறுவனம் தன் ப்ளே ஸ்டோரிலிருந்து அதிரடியாக நீக்கியுள்ளது. com.imagecompress.android com.contact.withme.texts com.hmvoice.friendsms com.relax.relaxation.androidsms com.cheery.message.sendsms (two different instances) com.peason.lovinglovemessage com.file.reco...
Comments
Post a Comment
Thanks for comments