நாடு முழுவதும் சீன பொருட்கள் வலுக்கிறது ஒதுக்க முடியுமா ஒரு பார்வை

லடாக் எல்லையில், 'பறக்கும் நாகம்' சீனா வாலாட்டிக் கொண்டிருக்கிறது. நாடு முழுக்க மக்களிடம் 'வேண்டாம் சீன பொருட்கள்' என்ற கோஷம் வலுத்து வருகிறது. சமீபத்தில் கூட நாம் விநாயகர் சதுர்த்திக்கு சீன பிள்ளையார் தான் வாங்க வேண்டுமா? என்று கேட்டார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். ஆனால், சீன பொருட்களை அடையாளம் காண தீவிரம் காட்டமாட்டோம் என்பது போல மத்திய அரசு தரப்பில் கருத்து கசிகிறது.
சரி, இப்போது மக்களே இயக்கமாக துவங்கி விட்டனர். உள்ளூர் வியாபாரிகளும் கைகோர்த்து விட்டனர். நாம் சீன பொருட்களை புறக்கணித்து
விட்டால் பெரும் வெற்றி தான்.
நடக்குமா? இதோ ஒரு பார்வை:

மருந்து பொருட்கள்
* மருந்து பொருட்கள், மாத்திரைகள், மருந்துகள் தயாரிக்கும் இந்திய கம்பெனிகளுக்கு மூலப்பொருட்களை தருவதே சீன நிறுவனங்கள்தான்
.ஏன் தெரியுமா? இந்திய நிறுவனங்களில் தயாரிக்கும் மூலப்பொருட்களை விட 20 முதல் 30% வரை விலை குறைவு. விடுவார்களா இந்த விலை மூலமான லாபத்தை நம் நிறுவனங்கள்.
* சீனாவில் இருந்து மருந்து மூலப்பொருட்களை இறக்குமதி செய்யாவிட்டால், மருந்து ஆலைகளுக்கு ஆபத்து ஏற்படாது; லாபம் தான் குறையும். இந்திய நிறுவனங்களிடம் இருந்து மூலப்பொருட்களை வாங்கி மருந்து தயாரிப்பர்.

டிஜிட்டல் வர்த்தகம்
* இந்தியாவில் உள்ள பல ஸ்டார்ட் அப் கம்பெனிகளுக்கு சீனாவில் இருந்து தான் முதலீடு வருகிறது. கிட்டத்தட்ட 500 கோடி டாலர் முதலீடு உள்ளது. சீன முதலீடு நிறுத்தினால் சற்று கஷ்டப்படும் இந்த நிறுவனங்கள்.
* பேடிஎம், பிக்பாஸ்கெட், ஸ்னாப்டீல், சொமேட்டோ ஆகியவற்றில் சீன நிறுவனங்களின் முதலீடு உள்ளது.
* பாலிசி பஜார், ஓலா, உதான், ஸ்விக்கி, ப்ளிப்கார்ட் போன்றவற்றிலும் சீன முதலீடு அதிகமாக உள்ளது.

சீனாவுடன் வர்த்தகம்
சீனாவுடன் பல்வேறு துறைகளில் வர்த்தகம் செய்து வந்த இந்தியாவுக்கு 2000ம் ஆண்டுக்கு பின்னரே சரிய ஆரம்பித்தது. இப்போது அது மிக அதிகமாக உள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.7 சதவீதம் பாதிப்பை ஏற்படுத்தும் அளவுக்கு அதிகரித்துள்ளது என்றால் பாருங்கள். ஆண்டுக்கு 4900 கோடி டாலர் அளவுக்கு வர்த்தகம் குறைந்து விட்டது.

ஆட்டோமொபைல்
* கார் உட்பட வாகன தயாரிப்பு துறையான ஆட்டோமொபைல் வர்த்தகத்திலும் சீன ஆதிக்கம் உள்ளது. மொத்தம் 27 சதவீதம் முதலீடு செய்துள்ளது சீன நிறுவனங்கள்.
* மின் சாதன பொருட்கள், குறிப்பாக செமி கண்டக்டர்கள் போன்ற சாதனங்கள் சீனாவில் இருந்து தான் வருகிறது.
* கார் உட்பட வாகன உதிரி பாகங்கள் புற்றீசல் போல இந்திய சந்தையில் பரவி உள்ளது.

ரசாயன ஆலைகளுக்கு
* ரசாயன ஆலைகளுக்கு குறிப்பாக விவசாயம் சார்ந்த பொருட்கள் தயாரிக்கும் ரசாயன தொழிற்சாலைகளுக்கு தேவையான ரசாயனங்களை இறக்குமதி செய்வது சீனாவில் இருந்து தான்.
* இந்த வகையில் 10 முதல் 50 சதவீதம் வரை சீனாவில் இருந்து ரசாயன பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகிறது.
* இதுதவிர, வேறு துணை பொருட்களும் சீனாவில் இருந்து தான் வருகிறது. சீனாவில் இருந்து இறக்குமதி செய்யும் பெரிய இந்திய நிறுவனங்களுக்கு தான் லாபம்.

ஸ்மார்ட் டிவிக்கள்
* சீன தயாரிப்பான ஜியோமி உட்பட அதன் ஸ்மார்ட் டிவி பெட்டிகள் இந்தியாவில் விற்பனையில் சக்கை போடு போடுகின்றன. இந்திய டிவி சந்தையில், சீன டிவி பிராண்டுகளின் ஆதிக்கம் எவ்வளவு தெரியுமா? 49%
* டிவி பிராண்டுகள் மட்டுமின்றி, கம்ப்ரெசர்கள், எல்இடி சிப்ஸ் போன்ற முக்கிய சாதனங்கள் சீனாவில் இருந்து தான் வந்து கொண்டிருக்கின்றன.

மொபைல் ஆதிக்கம்
* ஸ்மார்ட் மொபைல் போன் வாங்கணும் யாராவது கேட்டால், என்ன சொல்வாங்க தெரியுமா? யப்பா, சீன பிராண்டு வாங்கு, செம சீப். கையை கடிக்காது. எவ்வளவு வேண்டுமானாலும் தாங்கும். பேட்டரி லைப் சூப்பர்ன்னு தானே பதில் வரும். இப்படி பேசிப்பேசி தான் அவர்கள் நம்மூரில் மொபைல் சந்தையில் 76% ஆதிக்கம் செலுத்துகின்றனர்.
* இது மட்டுமா, டிவி, மொபைல் மட்டுமல்ல, பிரிஜ், ஏசி, வாஷிங்மிஷின்கள் பிராண்டுகளையும் இந்தியாவில் குவிக்க சீன நிறுவனங்கள் நேரம் காத்திருக்கின்றன.
* ஜியோமி, ஓப்போ, விவோ போன்ற பிராண்டுகள் பற்றி சொல்ல வேண்டுமா? வந்த சில மணி நேரத்துல பிச்சிக்கிட்டு விற்பனை ஆயிடுது தானே.

Comments

Popular posts from this blog

சவூதி விசா மற்றும் இக்கமா சலுகை

Before boarding Important thinks

unwanted 11 app இந்த 11 ஆப் உங்கள் மொபைலில் டவுன்லோட் செய்திருந்தால் டெலிட் செய்யவும்